தமிழ்நாடு செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது- DPI வளாகத்தில் பரபரப்பு
- சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் வாகனத்தை ஏற மறுத்து இடைநிலை ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2009ம் ஆண்டுக்குப்பின் பணி வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.