தமிழ்நாடு

ஐந்தருவியில் இன்று காலை முதல் அனுமதி வழங்கப்பட்டதால் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் 2 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி- மெயினருவியில் தடை நீட்டிப்பு

Published On 2023-11-03 06:06 GMT   |   Update On 2023-11-03 06:06 GMT
  • தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பிரதான அருவிகள் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதாலும் அருவியில் தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் தென்காசியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Tags:    

Similar News