தமிழ்நாடு செய்திகள்

பிராந்தி, ஒயின், பீர் வகைகள்- விலை உயர்வு எவ்வளவு தெரியுமா?

Published On 2023-07-20 12:50 IST   |   Update On 2023-07-20 12:50:00 IST
  • புதிய விலை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • 18 வகையான வெளிநாட்டு மதுபானங்களின் விலையை டாஸ்மாக் உயர்த்தி உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

இதன்படி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிராந்தி, ஒயின், பீர் உள்ளிட்டவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்கமாக ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒயின், பீர் என அனைத்து வகையான மதுபானங்களுக்கும் பொருந்தும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வின்படி 330 மில்லி வெட்மென் பில் சென்னர் பீர் ரூ.280-ல் இருந்து ரூ.290 ஆகவும், 500 மில்லி ஜெர்மனியா பில்ஸநர் பீர் (கேன்) ரூ.250-ல் இருந்து ரூ.270 ஆகவும் 300 மில்லி ஹாவெர்லி விட் பீர் ரூ.290-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இது தவிர 750 மில்லி ஸ்காட்ஸ் கிரே பிளென்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.2000-ல் இருந்து ரூ.2240ஆகவும், 750 மில்லி பிபிடர் ஜின் ரூ.2220-ல் இருந்து ரூ.2460 ஆகவும் 750 மில்லி ஜேமிசன் ஐரிஸ் விஸ்கி ரூ.3030-ல் இருந்து ரூ.3270 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்சமாக 1 லிட்டர் பிளாக்ஆப் ஸ்கயா வொட்கா பாட்டிலுக்கு ரூ.320 உயர்த்தப்பட்டு ரூ.1980-ல் இருந்து ரூ.2300 ஆகவும், ஹைலன்ட் கோல் பிளன்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.320 உயர்த்தப்பட்டு ரூ.2580-ல் இருந்து ரூ.2900 வரையும் விற்பனை செய்யப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இவ்வாறு மொத்தம் 18 வகையான வெளிநாட்டு மதுபானங்களின் விலையை டாஸ்மாக் உயர்த்தி உள்ளது.

Tags:    

Similar News