தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டை பகுதியில் மழை பெய்தபோது எடுத்தபடம்.

தென்காசி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை

Published On 2022-11-01 09:52 IST   |   Update On 2022-11-01 09:52:00 IST
  • செங்கோட்டையில் இரவு 1 மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
  • நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், பாளை உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.

செங்கோட்டை:

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதலே தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியான புளியரை, கற்குடி, தவணை, கண்ணுபுள்ளிமேடு, வல்லம், பிரானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. செங்கோட்டையில் இரவு 1 மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 32.6 மில்லிமீட்டர் மழை பதிவானது. மேலும் தென்காசியில் 31 மில்லிமீட்டரும், குண்டாறில் 29.4 மில்லிமீட்டரும் பெய்தது. மேலும் ஆய்க்குடி, கடனாநதி, குண்டாறு உள்ளிட்ட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், பாளை உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய அளவில் மழை பெய்யாததால் குற்றாலம் அருவிகளுக்கு பெரிய அளவில் தண்ணீர் வரத்து வரவில்லை.

மெயினருவியில் மட்டும் மிதமான அளவில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று குற்றாலம் அருவிகளில் மிகக்குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

Tags:    

Similar News