தமிழ்நாடு

(கோப்பு படம்)

மதுரையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்- மத்திய நிதி மந்திரிக்கு, தமிழக முதலமைச்சர் நன்றி

Published On 2022-06-29 18:00 GMT   |   Update On 2022-06-30 01:18 GMT
  • 48 வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
  • தமிழகத்தின் கோரிக்கை ஏற்று மத்திய நிதி மந்திரி ஒப்புதல்.

47வது ஜி.எஸ்.டி கவுன்சிலின் 2 நாள் ஆலோசனை கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அப்போது தமிழகம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி, அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்கள் அழைப்பை ஏற்று, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புக் கொண்டதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் சார்பாக, மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News