தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு- கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2023-10-25 11:09 GMT   |   Update On 2023-10-25 11:21 GMT
  • பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷம்.
  • பிடிப்பட்ட வினோத் ஏற்கனவே பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியவர் என தகவல்.

சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டை வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷமிட்டதாக தகவல் வெளியானது. பிடிப்பட்ட வினோத்திடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கடுக்காக வினோத் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிடிப்பட்ட வினோத் கடந்த 2022ல் தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டார்.

மேலும், கமலாலயம் மீது குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான் என வினோத் அப்போது வாக்குமூலம் அளித்திருந்தார்.

அண்ணாமலை, தனக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை போலீசாரிடம் வினோத் ஒப்படைத்திருந்தார்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, ஆளுநர் மாளிகை முன் கூடுதல் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News