தமிழ்நாடு

(கோப்பு படம்)

அரிசி, கோதுமை கொள்முதலில் தமிழகம் பற்றாக்குறை மாநிலமாக உள்ளது- இந்திய உணவு கழகம் தகவல்

Published On 2022-11-25 23:12 GMT   |   Update On 2022-11-25 23:12 GMT
  • பற்றாக்குறையை சமாளிக்க, பல மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை பெறப்படுகிறது.
  • ஒரு வருட தேவைக்கும் மேலாக உணவு தானியம் கையிருப்பு.

இந்திய உணவு கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய உணவுக் கழகத்தின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் ஆவடி மற்றும் எழும்பூரில் உள்ளன. மேலும், எலாவூரில் 0.25 மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட நிலையம் உள்ளது. 


இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஒரு வருட தேவைக்கும் மேலான உணவு தானியம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது.

பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் பெறப்படுகிறது.

பிரதமரின் இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னைப் பிரிவு, 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News