தமிழ்நாடு

நெய்வேலி என்.எல்.சி. சுரங்க புதைகுழியில் சிக்கிய சிறுவன் மீட்பு

Published On 2022-08-24 05:22 GMT   |   Update On 2022-08-24 05:22 GMT
  • மலைபோல் கொட்டப்பட்டுள்ள மணல் மேட்டில் ஈரப்பதம் இருப்பதை உணராத சிறுவன் நடந்து சென்றபோது திடீரென புதைக்குழியில் சிக்கினார்.
  • புதைகுழிக்குள் சிக்கிய அச்சிறுவனை சிறிது நேர போராட்டத்தின் பின், பத்திரமாக மீட்ட இளைஞர்கள் அவனுக்கு முதல் உதவி செய்தனர்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், 2-ம் சுரங்கம் அருகில் ஊமங்கலம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் அருகே சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்துவிட்டு, மண்ணை மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5 வயது சிறுவன் ஒருவன், மலைபோல் கொட்டப்பட்டுள்ள மணல் மேட்டில் ஈரப்பதம் இருப்பதை உணராத, அச்சிறுவன் நடந்து சென்ற போது, திடீரென புதைக்குழியில் சிக்கினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும், அந்த பகுதியில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாத நிலையில், சிறுவன் கத்தி கதறி கூச்சலிட்டு சோர்வடைந்து உள்ளான்.

அப்போது அந்த வழியாக வேலை பார்த்துவிட்டு, வீடு திரும்பிய நெய்வேலி அருகே ரோமாபுரி கிராமத்தைச் சேர்ந்த, இளைஞர்கள் புதைகுழிக்குள் சிக்கிய அச்சிறுவனை கண்டு சிறிது நேர போராட்டத்தின் பின், பத்திரமாக மீட்டு அவனுக்கு முதல் உதவி செய்தனர்.

பின்னர் அவனது வீடு எங்கு என்று விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இளைஞர்கள் சிறுவனை மீட்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News