தமிழ்நாடு செய்திகள்

ஈரோட்டில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சி சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்

Published On 2023-01-19 09:22 IST   |   Update On 2023-01-19 09:22:00 IST
  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
  • வாக்களிக்க வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இடைதேர்தல் நடக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளும் உடனடியாக தொடங்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 23 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News