தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டு பா.ஜ.க. பலத்தை நிரூபிக்க வேண்டும்- கொ.ம.தே.க ஈஸ்வரன் சவால்

Published On 2023-01-19 14:33 IST   |   Update On 2023-01-19 14:33:00 IST
  • தி.மு.க. கூட்டணி கட்சி வலுவாக உள்ளது.
  • தி.மு.க. கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும்.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக கூறி வருகிறார்கள். எந்த அளவுக்கு பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்பதை நிரூபிக்க அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும்.

தி.மு.க. கூட்டணி கட்சி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். தி.மு.க. கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும். அ.தி.மு.க.வில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒரு முடிவு இல்லாமல் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News