தமிழ்நாடு

மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு

Published On 2023-07-09 05:03 GMT   |   Update On 2023-07-09 05:03 GMT
  • வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது.
  • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று 2349 கன அடி நீர் வந்தது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. எனவே இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1505 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 244 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 12, தேக்கடி 8.6, சண்முகநதி அணை 0.6, மஞ்சளாறு 9 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News