தமிழ்நாடு செய்திகள்
விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
- அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.
- அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு ச் சென்றனர். இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத் துறையை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.