தமிழ்நாடு

செங்கல்பட்டில் நடைபெறும் உண்ணாவிரதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைக்கிறார்

Published On 2023-08-18 08:13 GMT   |   Update On 2023-08-18 08:13 GMT
  • சென்னையில் நடை பெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
  • அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

சென்னை:

நீட் தேர்வுக்கு விலக்கு கோரியும், இதற்கு முட்டுக்கட்டையாக உள்ள மத்திய அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டித்தும் தி.மு.க. சார்பில் 20-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் நடை பெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் நடை பெறும் உண்ணாவிரதத்தில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நடைபெறும் போராட்டம் செங்கல்பட்டு அரசு மருத்து வமனை எதிரில் நடைபெறுகிறது. இந்த உண்ணா விரதத்தை மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 20-ந் தேதி தொடங்கி வைத்து கண்டன உரையாற்ற உள்ளார். இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் பிரபு, மருத்துவ அணி அமைப்பாளர் செந்தில்குமார் வரவேற்புரையிலும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

இதில் துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, க.செல்வம் எம்.பி., மீ.அ.வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் து.மூர்த்தி, விசுவநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆ.மனோகரன், செம்பருத்தி, துர்கேஷ், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோரும் கண்டன உரையாற்றுகின்றனர்.

இதில் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர். முடிவில் சபாபதி மோகன் முடித்து வைத்து பேசுகிறார்.

Tags:    

Similar News