தமிழ்நாடு செய்திகள்

கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Published On 2023-06-27 12:21 IST   |   Update On 2023-06-27 12:21:00 IST
  • கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது பூஜ்ஜிய நிலைக்கு வந்திருந்தாலும், தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
  • கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பே பதிவாகாத நிலை தற்போது எட்டப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் இருந்தாலும் அதற்காக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள எவரும் முன்வராததுகூட அதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மற்றொருபுறம் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் சமூகத்தில் உருவாகி இருப்பதும் இத்தகைய நிலையை எட்டக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது பூஜ்ஜிய நிலைக்கு வந்திருந்தாலும், தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். கண்காணிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சமரசம் இருக்காது.

அதேபோன்று, பருவ காலங்களில் பரவும் சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து தகவல் அளிக்கவும், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News