தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு

Published On 2024-04-18 05:39 GMT   |   Update On 2024-04-18 07:40 GMT
  • தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என குற்றச்சாட்டு.
  • 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி நோட்டீஸ் விடுத்தேன்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என ஈபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதால் ஈபிஎஸ் மீது தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்திதத் தயாநிதி மாறன் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பாக எனது தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் நான் பயன்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் என்று கூறி அவதூறு பரப்பியுள்ளார்.

24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தேன். ஆனால், அதற்கு பதில் வரவில்லை. அதனால், ஈபிஎஸ் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு அடுத்த மாதம் 14-ந்தேதி தேதி விசாரணைக்கு வருகிறது.

தொகுதி நிதியில் சுமார் ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. தொகுதி நிதியை மத்திய சென்னை தொகுதி மக்களுக்காக செலவழித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தேர்தலில் அடையப்போகும் தோல்வியின் விரக்தியில் எனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அவர் பேசுவது அவருக்கு புரிகிறதா? என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் தி.மு.க.வினரை தாக்கினோம் என்று அவர் பேசுகிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News