தமிழ்நாடு செய்திகள்
திருப்பத்தூர், திருவண்ணாமலையில் டெங்கு
- இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
- திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தினர்.
திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.