தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது "மிச்சாங் புயல்"

Published On 2023-12-03 03:44 GMT   |   Update On 2023-12-03 04:52 GMT
  • மிச்சாங் புயல் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
  • புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வீசும்.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக வங்கக்கடலில் உருவானது.

* மிச்சாங் புயல் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

* நாளை முற்பகல் வேளையில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகளை மிச்சாங் புயல் அடையும்.

* நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே வருகிற 5ந்தேதி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

* புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வீசும்.

* சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* தூத்துக்குடி, பாம்பன், காரைக்கால், நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* சென்னை மெரினா கடற்கரை கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை தரைக்காற்று வீசுவதால் புழுதிக்காற்று வீசுகிறது.

* சென்னையில் பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News