தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

Published On 2022-12-09 08:33 IST   |   Update On 2022-12-10 03:45:00 IST
2022-12-09 13:25 GMT

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறி உள்ளார். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

2022-12-09 13:00 GMT

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. புயலின் நகர்வு வேகம் அதிகரித்துள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் கூறி உள்ளது.

2022-12-09 12:41 GMT

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

2022-12-09 12:41 GMT

அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2022-12-09 12:40 GMT

மாண்டஸ் புயல் மாமலல்புரத்திற்கு தென்கிழக்கில் 135 கிமீ தொலைவில் உள்ளது. மாமல்லபுரத்தை புயல் நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெயது வருகிறது.

2022-12-09 11:53 GMT

சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

2022-12-09 11:11 GMT

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் நிலையில், சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

2022-12-09 11:11 GMT

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2022-12-09 10:33 GMT

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

2022-12-09 10:15 GMT

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News