தமிழ்நாடு

3 துணை மின் நிலையத்துக்கு முதலமைச்சர் அனுமதி- சட்ட சபையில் இ.கருணாநிதி கேள்விக்கு செந்தில்பாலாஜி பதில்

Published On 2023-03-27 10:53 GMT   |   Update On 2023-03-27 10:53 GMT
  • கீழ்கட்டளை அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் கையகப்படுத்தபட்டது.
  • நிலம் கண்டறியப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதிப்பிடும் பணி செய்ததும் பணிகள் தொடங்கும் .

சென்னை:

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசும்போது, அனகாபுத்தூர், பொழிச்சலூர் பம்மல் பகுதிக்கு 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் ரூ. 48 கோடியில் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கீழ்கட்டளை அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் கையகப்படுத்தபட்டது. அங்கு டெண்டர் விட்டு எப்போது பணிகள் தொடங்கப்படும் என்று கேட்டார்.

இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளிக்கையில், அங்கு நிலம் கண்டறியப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதிப்பிடும் பணி செய்ததும் பணிகள் தொடங்கும் .

மேலும் பல்லாவரம் தொகுதிக்கு முதல்வர் 3 துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி தந்திருக்கிறார் என்ற தகவலையும் தெரிவி்த்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News