தமிழ்நாடு செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: முதலமைச்சர் ஆலோசனை
- போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.
போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.