தமிழ்நாடு செய்திகள்

தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Published On 2022-11-17 18:34 IST   |   Update On 2022-11-17 18:34:00 IST
  • பயனாளிகளின் பங்களிப்பை அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது
  • 573 வீடுகள் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

சென்னை:

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் பொருளாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வீடுகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள 677 தொழிலாளர் குடும்பங்களுக்கும் சராசரியாக 14 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அத்துடன், பயனாளிகளின் பங்களிப்பை அரசே ஏற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு பணி நிறைவுறும் தருவாயில் உள்ள 573 வீடுகள், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மேற்படி குடியிருப்புகளின் பயனாளர் பங்களிப்பு தொகையான ரூ.13.46 கோடியை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News