தமிழ்நாடு செய்திகள்

அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Published On 2023-08-16 17:03 IST   |   Update On 2023-08-16 17:03:00 IST
  • சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யகோரி வழக்கு தொடரப்பட்டது.
  • வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தன்னுடைய சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதால், சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யகோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருப்போரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை கண்டறிந்து, 4 வாரங்களில் ஆக்கிரமிப்பாளர்களை ஆகற்றும் நடவடிக்கையை முடிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தை, எந்த நோக்கத்திற்கான அறக்கட்டளை துவங்கப்பட்டதோ, அதற்காக செலவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News