தமிழ்நாடு

தி.மு.க.வை விமர்சிக்க சீமானுக்கு தகுதியில்லை: செங்கை பத்மநாபன் கண்டனம்

Published On 2023-10-28 09:03 GMT   |   Update On 2023-10-28 09:03 GMT
  • பொருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு கொண்ட சீமான் மகளிர் உரிமை பாதுகாவலரா?
  • 100 நாள் வேலை திட்டத்தை இழிவாக பேசுவதை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது.

சென்னை:

நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இதுபோல் 100 நாள் வேலை திட்டத்தையும் இழிவாக பேசுவது ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது.

பொருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு கொண்ட சீமான் மகளிர் உரிமை பாதுகாவலரா? எதற்கு எடுத்தாலும் தகுதி பற்றி பேசும் சீமான், 60 ஆண்டுகளாக காங்கிரஸ், 15 ஆண்டுகளாக பா.ஜ.க., 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் என்ன கிழித்தது என விமர்சனம் செய்வதற்கு முன் 60 வயதுடைய சீமான், வீட்டுக்கு வாடகை கொடுக்க பிச்சை எடுக்கிறேன் என அவரே கூறியுள்ளார்.

மொழியை கேடயமாக பயன்படுத்தும் நேர்மையற்ற வறண்ட பாலைவனம் சீமான். ஓநாயின் சூழ்ச்சியை தமிழ் தேசியவாதிகள் ஏற்க மாட்டார்கள். நமதுரிமை காக்கும் கட்சியும் ஏற்காது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News