தமிழ்நாடு செய்திகள்

நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்

Published On 2023-12-29 12:13 IST   |   Update On 2023-12-29 12:13:00 IST
  • சினிமா, அரசியல் என எல்லா இடங்களிலும் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர்.
  • தன்னுடைய பிறந்தநாளுக்கு கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் என 3 இடங்களுக்கும் சென்று விடுவார்.

வடக்குமாசி வீதி திருப்பதி (வயது 75):-

நான், விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தா் உள்ளிட்ட நண்பா்கள் தினமும் மேல ஆவணி மூலவீதியில் கூடுவோம். எங்களுக்குள் கிட்டத்தட்ட 45 வருட பழக்கம் உள்ளது. பெரிய நடிகர் என்றாலும் விஜயகாந்திடம் எந்தவித பந்தாவும் கிடையாது.

யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்வார். சினிமா, அரசியல் என எல்லா இடங்களிலும் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர். மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, கிறிஸ்து, முஸ்லீம் என பேதம்பார்க்க மாட்டார்.

தன்னுடைய பிறந்தநாளுக்கு கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் என 3 இடங்களுக்கும் சென்று விடுவார். அவரால் யாரும் பாதிக்கப்பட்டார்கள் என கூற முடியாது. அவரிடம் வேலை பார்ப்பவர்களையும் நன்றாக பார்த்துக்கொண்டார். டிரைவர் முதல் அனைவரையும் உரிமையோடும், பாசத்தோடும் அழைப்பார். தீபாவளி பண்டிகைக்கு மதுரைக்கு வந்து விடுவார். நண்பர்கள் யாரையும் விட்டுக்கொடுக்கமாட்டார். எளிய மனம் கொண்டவர். சுருக்கமாக சொல்லபோனால், நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர். சிறு வயதில் ரைஸ் மில்லில் எல்லா வேலைகளையும் தனி ஆளாக செய்தார். நாய் வளர்க்கும் பழக்கம் இருந்தது. ரைஸ் மில்லிலும் நாய் வளர்த்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News