தமிழ்நாடு செய்திகள்

கரடி சாய்த்த வாழை மரம்

களக்காடு அருகே கரடி அட்டகாசம்- விவசாயிகள் பீதி

Published On 2023-05-01 11:26 IST   |   Update On 2023-05-01 11:26:00 IST
  • குலை தள்ளி அறுவடைக்கு தயாராகி வந்த வாழைகளை கரடி சாய்த்ததால் அவருக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
  • விளைநிலங்களில் சுற்றி வரும் கரடியால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்தவர் பாலன். இந்திய கம்யூனிஸ்ட்டு நிர்வாகியான இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் ஊருக்கு அருகே உள்ள பூலங்குளம் பத்துக்காட்டில் உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை இவரது விளைநிலங்களில் புகுந்த 15 வாழை மரங்களை சாய்த்தது. குலை தள்ளி அறுவடைக்கு தயாராகி வந்த வாழைகளை கரடி சாய்த்ததால் அவருக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களில் சுற்றி வரும் கரடியால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

கரடி நடமாட்டத்தால் பகல் நேரங்களில் கூட விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிபடுவதாகவும் கூறினர். ஏற்கனவே இந்த பகுதியில் கடமான், காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வரும் நிலையில், தற்போது கரடியும் புகுந்துள்ளது.

எனவே ஊருக்குள் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வரும் கரடியை, கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News