தமிழ்நாடு

வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்க தானியங்கி சோதனை நிலையம்

Published On 2023-09-25 05:13 GMT   |   Update On 2023-09-25 05:13 GMT
  • தானியங்கி சோதனை நிலையம் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • 18 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை:

போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்றை 2024-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் தானியங்கி சோதனை நிலையம் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திண்டிவனம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 18 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 15 ஆண்டுகளுக்கு மேலான இரு சக்கர வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற ரூ.650 கார்களுக்கு ரூ.850 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News