தமிழ்நாடு

ஏற்காட்டில் மருத்துவ குணம் மிகுந்த அத்திப்பழம் விளைச்சல் அதிகரிப்பு

Published On 2023-07-09 05:36 GMT   |   Update On 2023-07-09 05:36 GMT
  • ஏற்காடு மலை கிராமங்கள் மற்றும் தனியார் காபி தோட்டங்களில் காபி செடியுடன் அத்திமரம் சாகுபடி செய்யப்படுகிறது.
  • மருத்துவ குணம் கொண்ட ருசி மிகுந்த இந்த பழத்தில் நார்ச்சத்துடன், இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்காடு:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஏற்காடு திகழ்கிறது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ ஆகும்.

ஏற்காடு மலை கிராமங்கள் மற்றும் தனியார் காபி தோட்டங்களில் காபி செடியுடன் அத்திமரம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அத்தி மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகிறது. நன்கு கனிந்த பழங்கள் தானாகவே கீழே விழுகின்றன. பழத்தில் இருந்து வெளிப்படக்கூடிய வாசனை கவர்ந்திழுப்பதாக உள்ளது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். ஒரு சில தோட்ட உரிமையாளர்கள் அத்திப்பழங்களை சேகரித்து உலரவைத்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.

சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

மருத்துவ குணம் கொண்ட ருசி மிகுந்த இந்த பழத்தில் நார்ச்சத்துடன், இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கியுள்ளன. மருத்துவ குணமிக்க அத்திப்பழங்கள் ஏற்காட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News