தமிழ்நாடு செய்திகள்
நெல்லை கோயில் திருவிழாவில் தகராறு- இருவர் கொலை
- அண்ணன், தம்பி இருவரும் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
- குமரி மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை.
நெல்லை திசையன்விளை அருகே, கோயில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அண்ணன், தம்பி இருவரும் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காரம்பாடு அருகே நடந்த கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் குமரி மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.