தமிழ்நாடு

பொன்முடிக்கு சிறை- தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Published On 2023-12-21 08:29 GMT   |   Update On 2023-12-21 08:31 GMT
  • மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • தீர்ப்பின் நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.

அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஆலோசனைக்கு பிறகு வரும் ஜனவரி 2ம் தேதி மேல்முறையீடு செய்யவுள்ளார்.

Tags:    

Similar News