தமிழ்நாடு செய்திகள்

யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்: அண்ணாமலை அதிரடி

Published On 2023-10-01 14:51 IST   |   Update On 2023-10-01 14:54:00 IST
  • நான் பதவிக்காக வந்தவன் அல்ல, மிகப்பெரிய பதவியை தூக்கை எறிந்து வந்தவன்.
  • அதிமுக தனியாக கூட்டணியை அமைத்தால் எந்தவித பின்னடைவும் கிடையாது.

கோவை:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் பதவிக்காக வந்தவன் அல்ல, மிகப்பெரிய பதவியை தூக்கை எறிந்து வந்தவன்.

யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்; யாரை பற்றியும் தவறாக சொல்லவில்லை.

என்னுடைய தனி உலகத்தில் இருக்கிறேன். ஒரு நாளைக்கு 9 முதல் 10 மணி நேரம் மக்களுடன் இருக்கிறேன். நான் முழு நேர அரசியல்வாதி கிடையாது. என்றைக்கும் எனது முதல் பணி விவசாயம்.

ஒரே மரத்தை கல் எடுத்து அடிப்பது போல என்னை இரண்டரை வருடங்களாக அடித்து வருகின்றனர்.

கம்யூ. கட்சிகள் திமுகவை புகழ்கின்றன.

அதிமுக தனியாக கூட்டணியை அமைத்தால் எந்தவித பின்னடைவும் கிடையாது. கூட்டணி குறித்து சம்பந்தப்பட்ட நேரத்தில் தலைவர்கள் பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News