தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியில்லை?- அண்ணாமலை சூசக தகவல்

Published On 2023-01-23 06:28 GMT   |   Update On 2023-01-23 06:28 GMT
  • இடைத்தேர்தல் என்பது கட்சிகள் பலம் காட்டும் தேர்தல் அல்ல.
  • கூட்டணிக்கென்று மரபு, தர்மம் உள்ளது. அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந்தேதி ஈரோட்டில் இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூசக தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

* இடைத்தேர்தல் என்பது கட்சிகள் பலம் காட்டும் தேர்தல் அல்ல.

* கூட்டணிக்கென்று மரபு, தர்மம் உள்ளது. அதன்படி நடந்து கொள்ள வேண்டும். கூட்டணி தர்மப்படி நடந்து கொண்டால்தான் அனைவருக்கும் மதிப்பு இருக்கும்.

* கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க. தான்.

* ஈரோட்டில் அதிமுகவினர் பலர் இதற்கு முன்பாக வெற்றி பெற்றுள்ளனர். ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளனர்.

* போட்டியிடக்கூடிய வேட்பாளர் பண பலம் மற்றும் அதிகார பலத்தை முறியடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News