தமிழ்நாடு

(கோப்பு படம்)

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை- அண்ணாமலை உறுதி

Published On 2022-12-01 00:00 GMT   |   Update On 2022-12-01 00:46 GMT
  • இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • மீனவ சமுதாய மக்களுக்கு தமிழக பாஜக என்றும் அரணாக இருக்கும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப் பட்டினத்தில் இருந்து கடந்த 28ந் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக சொல்லி 24 மீனவர்களையும், 5 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து இலங்கை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

உடனடியாக இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய இணை மந்திரி முருகனிடமும் தெரிவிக்கப்பட்டது. நமது மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்க தமிழக பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள நமது இந்திய தூதரக அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட 24 மீனவர்களை பிணையில் விடுவிக்கவும், 5 படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சிறைப்பிடிக்கப்பட்ட நமது மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முருகனுக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக பாஜக மீனவ சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News