தமிழ்நாடு

முறைகேடு நடந்ததாக புகார்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை

Published On 2023-09-05 08:02 GMT   |   Update On 2023-09-05 08:02 GMT
  • ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
  • பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.112 கோடிக்கு நிதி நிர்வாக முறைகேடுகள், நடந்ததாகவும் பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது, மற்றும் பல்கலைகழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்.

மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News