தமிழ்நாடு

கணவரை தவிக்கவிட்டு 2 குழந்தைகளுடன் இளம்பெண் கள்ளக்காதலனுடன் திடீர் ஓட்டம்

Published On 2023-11-05 08:27 GMT   |   Update On 2023-11-05 08:27 GMT
  • காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
  • சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் காஞ்சனா தேவி (வயது 26). இவருக்கும் சென்னையை சேர்ந்த சோலைராஜ் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி (6), கெவின்ராஜ் (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். காஞ்சனா தேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார்.

இதற்கிடையே காஞ்சனா தேவிக்கு திடீர் உடல்நலக்கு றைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற வசதியாக சோலைராஜ் தனது மனைவியை, குழந்தைகளை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். காஞ்சனாதேவியின் தந்தை தள்ளு வண்டியில் அப்பளம் வியாபாரம் செய்து வந்தார்.

அவர் தனக்கு உதவியாக பெரம்பலூர் மாவட்டம் கீரனூரை சேர்ந்த செந்தில் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். அவர் அடிக்கடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்துசென்றபோது காஞ்சனாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மாரிமுத்து செந்திலையும், மகள் காஞ்சனா தேவியையும் கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சனாதேவி, தந்தை வீட்டில் இருந்து வெளியேறி அதே பகுதியில் குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார். மகளை மறக்க மனமில்லாத மாரிமுத்து அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்று பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்றும் அவர் சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. அக்கக் பக்கத்தில் விசாரித்தபோது காஞ்சனாதேவி வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அப்போது மாரி முத்துவை செல்போனில் தொடர்பு கொண்ட காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையுடன் மாயமான காஞ்சனாதேவி மற்றும் செந்திலை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News