தமிழ்நாடு

கூடலூர் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் சுற்றி திரியும் கரடியை படத்தில் காணலாம்.

கூடலூா் போலீஸ் நிலைய வளாகத்துக்குள் சுற்றி திரிந்த கரடி

Published On 2023-08-26 04:23 GMT   |   Update On 2023-08-26 04:23 GMT
  • சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
  • கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் அதிகமான வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த விலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.

அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதுடன், அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. அதோடு, சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கூடலூர் பகுதியை யொட்டிவனத் தில் இருந்து சம்பவத்தன்று இரவு கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறியது.

அந்த கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

அங்கு அந்த கரடி வெகு நேரமாக சுற்றித் திரிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

நகரின் மையப்பகுதியிலுள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் கரடி நுழைந்திருப்பது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags:    

Similar News