தமிழ்நாடு செய்திகள்

சுதந்திர தின விழா: அனைவருக்குமான இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம் - மு.க. ஸ்டாலின் - லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-08-15 08:46 IST   |   Update On 2024-08-15 10:25:00 IST
2024-08-15 04:01 GMT

கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

2024-08-15 03:59 GMT

2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

2024-08-15 03:56 GMT

சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கயத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

2024-08-15 03:50 GMT

முதலமைச்சர்கள் கொடியேற்ற அதிகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

2024-08-15 03:45 GMT

இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

2024-08-15 03:40 GMT

விடுதலை எளிதாக கிடைக்கவில்லை, 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைத்தது. நாட்டு பன்முகத்தன்மையின் அடையாளம் தான் தேசியக்கொடி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

2024-08-15 03:38 GMT

தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

2024-08-15 03:37 GMT

சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

2024-08-15 03:35 GMT

தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்

2024-08-15 03:30 GMT

புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

Tags:    

Similar News