தமிழ்நாடு

இலங்கை தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சி- திருச்சி முகாமில் பரபரப்பு

Update: 2022-06-24 14:36 GMT
  • திருச்சி சிறப்பு முகாமில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
  • விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதம்

திருச்சி:

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், சூடான், நைஜீரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்த நிலையில் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 21 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் 30 பேர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 30 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திருச்சி அகதிகள் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News