தமிழ்நாடு

சென்னை-காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் 2-வது நாளாகவேலை நிறுத்தம்- அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை

Published On 2022-07-05 07:50 GMT   |   Update On 2022-07-05 07:50 GMT
  • சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. துறைமுகம் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.
  • துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ராயபுரம்:

சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் சரக்கு பெட்டகங்களை கையாளும் கண்டெய்னர் டிரெய்லர் லாரிகளுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. துறைமுகம் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.

இந்த நிலையில் கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

இதற்கிடையே சென்னை துறைமுக தலைவர் மற்றும் அதிகாரிகள் இன்று பெட்டக முனைய உரிமையாளர்கள், கண்டெய்னர் துறைமுக ஒப்பந்த கூட்ட மைப்பினர் உள்ளிட்ட அமைப்புகளுடன்சென்னை துறைமுகத்தில் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

இதில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News