தமிழ்நாடு செய்திகள்
மதுரை மாநகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

கமல் சினிமா போஸ்டர் விவகாரம்- மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மீது வழக்கு

Published On 2022-05-24 14:16 IST   |   Update On 2022-05-24 14:16:00 IST
“சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? வா, பாத்துக்கலாம்” என்ற வாசகங்களுடன் மதுரை மாநகரில் திடீர்நகர், தெற்குவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
மதுரை:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதை வரவேற்று மதுரையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? வா, பாத்துக்கலாம்” என்ற வாசகங்களுடன் மதுரை மாநகரில் திடீர்நகர், தெற்குவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு-மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன், மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் அந்த போஸ்டரை மாநகரம் முழுவதும் ஒட்டியது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்ட 2 கட்சி நிர்வாகிகள் மீதும் திடீர்நகர், தெற்குவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News