தமிழ்நாடு செய்திகள்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் 2 புதிய மேம்பாலங்கள்- விபத்துக்களை தடுக்க நடவடிக்கை
மாமல்லபுரம்கிழக்கு கடற்கரை சாலை புறவழி வடக்கு நுழைவு வாயில் பகுதியில் 1,300 மீட்டர் நீளத்திற்கு ஒரு மேம்பாலம், என 2 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரையான 95கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தின் நுழைவு வாயில் பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மேற்கு நுழைவு வாயில் பகுதியான பூஞ்சேரி, ஓ.எம்.ஆர், திருக்கழுக்குன்றம் என மூன்று சாலை சந்திப்பு பகுதியில் 1,000 மீட்டர் நீளத்திற்கு வளைவு மேம்பாலம்., மாமல்லபுரம்கிழக்கு கடற்கரை சாலை புறவழி வடக்கு நுழைவு வாயில் பகுதியில் 1,300 மீட்டர் நீளத்திற்கு ஒரு மேம்பாலம், என 2 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.
இதற்கான அளவீடு, வடிவமைப்பு, மணல் பரி சோதனை, போன்ற முதற்கட்ட ஆய்வுப்பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் 3 நாட்களாக செய்து வருகிறது.