தமிழ்நாடு செய்திகள்
களைகட்டிய கோடை விழா: 2-வது நாளாக காய்கறி கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினம் என்பதாலும், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும் சுற்றுலா பயணிகள் கடந்த சில மாதங்களாகவே ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்னர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் நிறைந்த பகுதிகளையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழா நேற்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் களை கட்ட தொடங்கியது.
இந்த கண்காட்சியில் ஒன்றரை டன் எடை கொண்ட கேரட் மற்றும் முள்ளங்கிகளை கொண்டு குட்டியுடன் கூடிய ஒட்டகசிவிங்கி, கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல வகையான காய்கறிகள் கொண்டு வரப்பட்டு, முதலை, மயில் பஞ்சவர்ண கிளி, கங்காரு, பாண்டா கரடி, கப்பல் டோரா உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மக்காத குப்பைகளை கொண்டு காட்டெருமை, மான், கோமாதா முயல், வீட்டு அலங்கார பொருட்கள், கடிகாரம், வீணையும் வைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினம் என்பதாலும், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும் சுற்றுலா பயணிகள் கடந்த சில மாதங்களாகவே ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்னர். நேற்று காய்கறி கண்காட்சியை தொடங்கியதை அறிந்து கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
2-வது நாளான இன்றும் காலை முதலே பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் பூங்காவில் குவிந்தனர்.
அவர்கள் அங்கு பல வகை காய்கறிகளை கொண்டு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையிலான வனவிலங்குகளின் உருவங்களை கண்டு ரசித்ததுடன், அவற்றுடன் நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். குறிப்பாக பூங்காவில் ஒன்றரை டன் காய்கறிகளை கொண்டு குட்டியுடன் காட்சிபடுத்தப்பட்டிருந்த ஒட்டகசிவிங்கி சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்திழுத்தது. அனைத்து சுற்றுலா பயணிகளும் இதனை ஆச்சரியத்துடன், அதிசயமாகவும் பார்த்து வியப்பில் ஆழ்ந்து, செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுதவிர பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், அதற்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.