தமிழ்நாடு செய்திகள்
சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு- ஏற்காட்டில் சாலைகளில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன
30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் இன்று காலையும் வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக எடப்பாடி, ஏற்காடு, மேட்டூரில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 3 மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
ஏற்காட்டில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 3 மணி நேரம் கொட்டிய கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது . மேலும் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காட்டிற்கு செல்லும் முக்கிய பாதையான அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.
இதனால் ஏற்காடு மலைப்பாதையில் நேற்றிரவு 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. மேலும் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்ததில் மின்கம்பங்கள் உடைந்தும், மின்சார ஒயர்கள் அறுந்தும் சாலையில் விழுந்தது. இதனால் ஏற்காடு முழுவதும் மின்தடை ஏற்றப்பட்டது.
பின்னர் வனத்துறையினர், மின்சார துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரும் விரைந்து சென்று மரங்களையும், மின்சார கம்பங்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து 3 மணி நேரத்திற்கு பிறகு வாகனங்கள் மெதுவாக சென்று வந்தன.
இதே போல ஏற்காட்டில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் வீடுகள் மீதும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மலை கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் கிராம மக்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் இன்று காலையும் வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
நம்பிக்கை மேரி என்பவரது வீட்டில் மீது மரம் விழுந்ததில் வீட்டில் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின் கம்பங்களும் சாலையில் விழுந்தது. அதனை சீரமைக்கும் பணியில் மின் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 8.30 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 45.2, மேட்டூர் 33.52, ஆத்தூர் 31.4, தம்மம்பட்டி 18, சேலம் 17.8, ஓமலூர் 16.2, வீரகனூர் 12, கரியகோவில் 8, பெத்தநாயக்கன் பாளையம் 7, சங்ககிரி 6.4, கெங்கவல்லி 6, ஆனை மடுவு 6, காடையாம்பட்டி 5 மி.மீ. மழையும் பெய்துள்ளது.