தமிழ்நாடு செய்திகள்
குண்டேரிபள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
முதல்போக சாகுபடிக்கு குண்டேரிபள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
டி.என்.பாளையம்:
குன்றிமலை அடிவாரத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு 42 அடி உயரத்திற்கு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.
குன்றி, விளாங்கோம்பை மல்லியம்மன்துர்கம். கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடையும் வகையில் அணை கட்டப்பட்டு உள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் உதவி பொறியாளர் கல்பனா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர்.
இன்று முதல் ஜூன் 9-ந் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் என்றும் முதலில் 12 நாட்களுக்கும், அதைத்தொடர்ந்து 5 நாட்கள் இடைவெளியில் 10 நாட்கள் வீதம் மொத்தம் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.