தமிழ்நாடு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

தாம்பரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-04 07:02 GMT
தாம்பரத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து விடுதலைசிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்:

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்டோ ஒன்றை கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து வந்தனர். மேலும் கேஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வக்கீல் பொற்செழியன், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் பூவிழி, நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், நகர செயலாளர்கள் ராமானுஜம், ஆதிசாலமன், திருநீர்மலை தமிழரசன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News