தமிழ்நாடு செய்திகள்
போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளை படத்தில் காணலாம்.

மாநில அளவிலான பென்சாக் சிலாட் தற்காப்பு கலை போட்டிகள்

Published On 2022-03-11 14:20 IST   |   Update On 2022-03-11 14:20:00 IST
மாநில அளவிலான பென்சாக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அணி முதலிடம் பெற்றது.
பரமத்தி வேலூர்:

தமிழ்நாடு பென்சாக் சிலாட் அசோசியேஷன் நடத்திய மாவட்டங்களுக்கு இடையே மாநில அளவிலான தமிழ்நாடு பென்சாக் சிலாட் தற்காப்பு கலை போட்டிகள் புன்னம் சத்திரத்தில் நடைபெற்றது. பாண்டியன் தலைமை ஏற்று போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பென்சாக் சிலாட் அசோசியேஷன் மாநில செயலாளர் மகேஷ் பாபு முன்னிலை வகித்தார் .

இதில் 22 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறை அணி உட்பட 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் இறுதி நாளான நேற்று புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட அணி வென்றது.

இரண்டாவது இடத்தை தர்மபுரி மாவட்ட அணியும், முன்றாவது இடத்தை தமிழ்நாடு காவல்துறை அணியும் வென்றது. வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் அடுத்து நடக்கவிருக்கும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கும், தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

Similar News