தமிழ்நாடு செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

தேர்தலில் செலவழித்த பணத்தை எடுக்கவே கவுன்சிலர்கள் விலை போகிறார்கள்- கார்த்தி சிதம்பரம்

Published On 2022-03-03 09:56 IST   |   Update On 2022-03-03 09:56:00 IST
காலம் காலமாக ரஷியாவுடன் இந்தியா நல்லுறவு வைத்துள்ளதால் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னென்ன உத்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த வி‌ஷயம். சில கவுன்சிலர்கள் பணம் செலவழித்து வெற்றி பெற்று உள்ளனர். தற்போது அந்த பணத்தை எடுப்பதற்காகவே கவுன்சிலர்கள் விலை போகின்றனர்.

அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அந்த கட்சியின் தலைமை சரியில்லாத காரணத்தால், அவர்களின் வாக்கு வங்கியையும் அந்த இயக்கத்தையும் அவர்களால் ஒருங்கிணைத்து தேர்தலிலே செயல்பட முடியவில்லை என கருதுகிறேன்.

காலம் காலமாக ரஷியாவுடன் இந்தியா நல்லுறவு வைத்துள்ளதால் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போர் நீடித்தால் ரஷியா மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அரசு அதை சரி செய்ய வேண்டும். இங்குள்ள மருத்துவ படிப்பு முறை சரியில்லாததால்தான் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிறார்கள். எனவே அதிகளவிலான மருத்துவக் கல்லூரிகளை இந்தியாவில் நிறுவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News