தமிழ்நாடு செய்திகள்
திண்டிவனத்தில் அதிகாலை வானில் வெண் புகை மூட்டத்துடன் கூடிய தீப்பிழம்பால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம் சாலையில் இன்று அதிகாலை வானில் வெண்புகை மூட்டத்துடன் கூடிய தீப்பிழம்பு காணப்பட்டது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம் சாலையில் இன்று அதிகாலை வானில் வெண்புகை மூட்டத்துடன் கூடிய தீப்பிழம்பு காணப்பட்டது. இதனை ஆச்சரியத்துடனும், ஒரு வித கலக்கத்துடனும் அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
அந்த வெண் புகை அருகே பிரகாசமான ஒளியுடன் கூடிய ஒரு பொருள் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த மர்மப் பொருள் மேலே செல்லும் பொழுது எந்திரக்கோளாறு காரணமாக கீழே விழும் தருவாயில் இந்த தீப்பிழம்பு மற்றும் வெண்புகை ஏற்பட்டிருக்கலாம் என தெரி கிறது. பின்னர் அந்த மர்ம பொருள் மேல் நோக்கி சென்றது.