தமிழ்நாடு செய்திகள்
கொடநாடு எஸ்டேட் அருகே காந்திநகர் பகுதியில் உலா வந்த 2 புலிகள்

கொடநாடு எஸ்டேட் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் 2 புலிகள்

Published On 2022-02-10 13:42 IST   |   Update On 2022-02-10 13:42:00 IST
கோத்தகிரி கொடநாடு எஸ்டேட் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் 2 புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது.

சமீபகாலமாக பகல், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள், சாலைகள் போன்ற பகுதிகளில் கரடி, காட்டு மாடு, சிறுத்தை, யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உலவி வருவது வாடிக்கையாக உள்ளது.

சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் வனவிலங்குகள், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளன.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் 2 புலிகள் உலா வந்ததுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

ஒரே இடத்தில் 2 புலிகள் உலா வந்தது அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அப்பகுதியில் முகாமிட்டுள்ள புலிகளை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும். அல்லது மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Similar News