தமிழ்நாடு
முகக்கவசம் அணிந்ததற்கு நன்றி என்று மோட்டார் சைக்கிளில் ஸ்டிக்கர் ஒட்டிய காட்சி

முக கவசம் அணிந்து சென்ற 5 ஆயிரம் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி நன்றி தெரிவித்த போலீசார்

Published On 2022-01-22 10:02 GMT   |   Update On 2022-01-22 10:02 GMT
முகக்கவசம் அணிந்து செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களில் முக கவசம் அணிந்ததற்கு நன்றி என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரை சுமார் 5000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் ஒட்டி வாகன ஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

சென்னை:

ஆவடி காவல் ஆணைய ரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிந்து செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் முக்கிய சாலைகளில் போக்கு வரத்து போலீசாரால் முகக்கவசம் அணிந்து செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களில் முக கவசம் அணிந்ததற்கு நன்றி என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரை சுமார் 5000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் ஒட்டி வாகன ஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆவடி பகுதிகளில் சென்ற கார், மோட்டார் சைக்கிள்களில் இந்த ஸ்டிக்கரை போலீசார் ஒட்டினார்கள்.

ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து போலீசார் ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பட்டிலுள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கும் மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு முக கவசம் அணிந்ததற்கு நன்றி என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் தொடர்ந்து ஒட்டப்பட உள்ளது.

Tags:    

Similar News