கோவையில் மனைவியின் கள்ளக்காதலனை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் நண்பர் மனைவியுடன் கள்ளக்காதல்: வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கணவர்
பதிவு: ஜனவரி 17, 2022 13:01 IST
வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கணவர்
கோவை:
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
நான் காந்திபுரத்தில் உள்ள பார்சல் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு என் நண்பரின் மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. எனது நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு செல்லும் நான் அவரது மனைவியுடன் ஜாலியாக உல்லாசம் அனுபவித்து வந்தேன். இந்த நிலையில் எங்களது கள்ளக்காதல் விவகாரம் எனது நண்பருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார்.
மேலும் அவரது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனால் நான் கள்ளகாதலை தொடர்ந்து வந்தேன். அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடன் ஜாலியாக இருந்து வந்தேன்.
சம்பவத்தன்று நான் எனது வீட்டில் இருந்த போது என நண்பர் அவரது நண்பர்கள் 6 பேருடன் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் என்னை தாக்கி தகாத வார்த்தைகள் பேசி அவரது செல்போனில் என்னை ஆபாச வீடியோ எடுத்தார்.
பின்னர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். மேலும் அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்கும் படி மிரட்டி வந்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.